/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 2206 போலீசார் பாதுகாப்பு
/
சிவகங்கையில் 2206 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஏப் 19, 2024 05:17 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1357 ஓட்டுச்சாவடி மையங்களில் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 2206 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி., 10 டி.எஸ்.பி., மேற்பார்வையில் 40 இன்ஸ்பெக்டர்கள் 118 அதிவிரைவுப்படையினர், 38 எஸ்.ஐ., மற்றும் 76 போலீசார் அடங்கிய 38 விரைவான எதிர்வினை குழு, 111 எஸ்.ஐ., மற்றும் 111 போலீசார் அடங்கிய 111 ரோந்து வாகனங்கள். மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளில் 28 எஸ்.ஐ., மற்றும் 28 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட முழுவதும் உள்ள 1357 ஓட்டுச்சாவடி மையங்களில் போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய ஆயுத படையினர் அடங்கிய 1642 பேர் என மொத்தமாக 2206 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

