/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மின்வாரியத்தில் 230 ஊழியர் காலியிடம்; மின்பழுதை சரிசெய்வதில் சிக்கல்
/
காரைக்குடி மின்வாரியத்தில் 230 ஊழியர் காலியிடம்; மின்பழுதை சரிசெய்வதில் சிக்கல்
காரைக்குடி மின்வாரியத்தில் 230 ஊழியர் காலியிடம்; மின்பழுதை சரிசெய்வதில் சிக்கல்
காரைக்குடி மின்வாரியத்தில் 230 ஊழியர் காலியிடம்; மின்பழுதை சரிசெய்வதில் சிக்கல்
ADDED : மே 16, 2024 06:20 AM
சிவகங்கை: காரைக்குடி மின் செயற்பொறியாளர் கோட்டத்தில் வயர்மேன், ஹெல்பர் என 230க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களால், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதை உரிய நேரத்தில் சரிசெய்ய முடியாமல் மின்வாரியம் திணறி வருகிறது.
காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ் காரைக்குடி வடக்கு, தெற்கு, கானாடுகாத்தான், புதுவயல், கல்லல், கண்டரமாணிக்கம், தேவகோட்டை பகுதிகளில் 1.85 லட்சம் வீடுகள், 30 ஆயிரம்கடைகள், 3500 தற்காலிக இணைப்பு, 4200 விவசாய இணைப்பு, 2300 அரசு அலுவலக இணைப்புகள் உள்ளன.
இங்கு 20 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு ஒருபகுதி மின் அலுவலகம்இருக்க வேண்டும். ஆனால், மின் இணைப்பு பெருக்கத்தால், ஒரு மின் பகுதி அலுவலகத்திற்கு 40 ஆயிரம் மின் இணைப்புகளாக பெருகிவிட்டன.
ஒரு பகுதி அலுவலகத்திற்கு தலா 10 ெஹல்பர், வயர் மேன்கள் இருந்தனர். இன்றைக்கு அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக காரைக்குடி பகுதியில் ஏற்படும் மின்பழுதை சரிசெய்வதற்கு ஊழியர்களின்றி மின்வாரியம் திணறி வருகிறது.
கோடை வெயிலால் வீடுகளில் மின் தேவையும் அதிகரித்துவிட்டன. இரவில் ஏ.சி., உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், அடிக்கடி மின்சாதனங்கள் பழுதாகி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டால் காரைக்குடி மக்கள் தவிக்கின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண காரைக்குடி மின் செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள அனைத்து மின் அலுவலகத்திற்கு போதிய ஊழியர்களை நியமித்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
230 மின் ஊழியர் காலியிடம்
மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
பணி நேரத்திற்கு பின் ஏற்படும் மின்பழுதை சரி செய்ய குழுக்கள் அமைத்து செயல்படுகிறோம். கோடையில் மின்தேவை அதிகரிப்பதால் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதாகின்றன. உடனுக்குடன் ஊழியர்களை வைத்து மின்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம்.
காரைக்குடி மின்கோட்டத்தில் வயர்மேன், ெஹல்பர் என 230 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள ஊழியர்களை வைத்து தான் மின்பழுதை சரி செய்து வருகிறோம்.