/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் விதிமீறல் ஒரே நாளில் 37 வழக்கு
/
தேர்தல் விதிமீறல் ஒரே நாளில் 37 வழக்கு
ADDED : ஏப் 17, 2024 06:57 AM
சிவகங்கை, சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு எம்.எல்.ஏ., தொகுதிக்கும் 3 பறக்கும் படைக்குழு, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, ஒரு வீடியோ பார்வையிடும் குழு என 36 குழுக்கள் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் நடவடிக்கை, பிரசாரம், வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் வைத்தது, கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பிரசாரம், ஆரத்தி எடுத்தற்கு பணம் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல் செய்தாக அரசியல் கட்சிகள் மீது நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

