/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
/
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
ADDED : மார் 01, 2025 03:03 AM

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இரண்டு வீடுகளில் நகைகளை கொள்ளையடித்தவர், உதவிய தாய், மகன், மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை பாண்டித்துரை மனைவி ஆசிரியை சீதாலட்சுமி. பிப்., 23 பகலில் சந்தைக்கு போய்விட்டு வருவதற்குள் வீட்டு கதவை உடைத்து 40 பவுன், ரூ 2.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். அங்கிருந்து 200 மீட்டர் துாரத்தில் உள்ள ராஜாமணி வீட்டில் 14 பவுன், ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
டி.எஸ்.பி., கவுதம், போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். கொள்ளையன் ஓட்டி வந்த டூவீலர் காரைக்குடியில் ஒரு வாரத்திற்கு முன்பு திருடு போனது என்றும், திருடியவர் காரைக்குடி சத்யா நகர் சரவணன் 40, என தெரிய வந்தது.
அவர் டூவீலரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, அதன் நம்பர் பிளேட்டை உடைத்தும், ஆயுதங்களை போட்டு விட்டு தோழியுடன் திருச்செந்துார் சென்றிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. சரவணனை போலீசார் பிடித்தனர். அவர் மீதுள்ள 18 திருட்டு வழக்குகளில் ஆறில் தண்டனை பெற்றுள்ளார். இரு வீட்டிலும் திருடிய நகை, பணம், இரண்டு அலைபேசிகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
விசாரணையில் சரவணனின் தோழி காரைக்குடி கழனிவாசல் ராஜ்குமார் மனைவி செல்வி 40, செல்வியின் மகன் கார்த்திகேயன் 20, மகள் பிர்யதர்ஷினி 22, சரவணனின் திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.