ADDED : பிப் 24, 2025 02:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை, : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள் 40 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தேவகோட்டை வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி 35. இங்குள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று காலை சீதாலட்சுமி வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். மதியம் 2:00 மணிக்கு அவர் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவுகள் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.2.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.

