/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்டத்தில் 175 பயனாளிக்கு ரூ.44.64 லட்சம் நலத்திட்ட உதவி; கலெக்டர் ஆஷா அஜித் வழங்கல்

ADDED : ஆக 20, 2024 07:25 AM
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 175 பயனாளிகளுக்கு ரூ.44.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலெக்டரிடம் வீட்டு மனைபட்டா, உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ரேஷன் கார்டு கேட்டு 380 பேர் மனு அளித்தனர். இக்கூட்டத்தில் 175 பயனாளிகளுக்கு ரூ.44.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த கீழநெட்டூர், தமறாக்கி வடக்கு சமுதாயக்கூட பராமரிப்பிற்காக மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
சமுதாயக்கூட சாவியினை மகளிர் குழுவினரிடம் கலெக்டர் ஒப்படைத்தார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.