ADDED : மே 24, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டவராயன்பட்டி:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடி காலனி பகுதியை சேர்ந்த சின்னையா, ராமன், மணிமாறன், கருப்பையா, சேது ஆகியோரது மாடுகள் அருகில் உள்ள சோழம்பட்டி கிராமத்து வயலில் நேற்று காலை மேய்ந்தன.
காரையூர் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் பகுதியில் மேய்ச்சலில் இருந்த போது மின் கம்பத்திலிருந்து கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 5 மாடுகள் மீதும் மின்சாரம் தாக்கி இறந்தன. மின்பணியாளர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர்.

