/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.55 லட்சம் செலவழித்து துாரெடுத்த ஊரணி வரத்துக் கால்வாய் சீரமைக்காததால் வீணானது
/
ரூ.55 லட்சம் செலவழித்து துாரெடுத்த ஊரணி வரத்துக் கால்வாய் சீரமைக்காததால் வீணானது
ரூ.55 லட்சம் செலவழித்து துாரெடுத்த ஊரணி வரத்துக் கால்வாய் சீரமைக்காததால் வீணானது
ரூ.55 லட்சம் செலவழித்து துாரெடுத்த ஊரணி வரத்துக் கால்வாய் சீரமைக்காததால் வீணானது
ADDED : ஏப் 26, 2024 12:52 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் சீரமைக்கப்பட்ட ஊரணிக்கு தண்ணீர் வராத நிலையில் நீர்வரத்திற்காக வாய்க்காலையும் துார்வாரி புதுப்பிக்க கிராம மக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் புதுப்பட்டி மருதாண்டி ஊரணி குடிநீருக்கு பயன்பட்டது. நீண்ட காலமாக அருகிலுள்ள பல கிராமங்களிலிருந்து கிராமத்தினர் வந்து குடிநீர் எடுத்ததுண்டு. தொடர்ந்து மழை இல்லாததாலும், வரத்துக்கால்வாய்கள் துார்ந்து போனதாலும் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் எடுக்க முடியவில்லை. தற்போது நகர்ப்புற மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ 55 லட்சம் செலவில் ஊரணி முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தில் வரத்துக்கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை.
குயவன் ஏந்தலிலிருந்து பாசனக் கால்வாய் மூலம் வரும் நீர் ரோட்டைத் தாண்டி போலீஸ் குடியிருப்பு வழியாக ஊரணிக்கு செல்ல வேண்டும். அதில் குயவன் ஏந்தல் பகுதி ஊராட்சி ஒன்றிய பகுதி என்பதால் பேரூராட்சி திட்டத்தில் அப்பகுதியை சேர்க்க முடியவில்லை. இதனால் மழைக் காலத்தில் இந்த ஊரணிக்கு நீர்வரத்துக் கேள்விக்குறியாக உள்ளது.
இந்திராநகர் பஞ்சவர்ணம் கூறுகையில், ஊரணியில் தண்ணீர் எடுத்து தான் சமைப்போம். ரொம்ப வருஷமா ஊரணி தண்ணீர் இல்லாமல் சிரமமாக இருக்கு. குசவக் கண்மாயிலிருந்து தண்ணீர் செல்வதற்கு வாய்க்கால் எல்லாம் துார்ந்து போச்சு. அதை சரி செய்தால் தான் ஊரணிக்கு தண்ணீர் வரும்' என்கிறார்.
பேரூராட்சி தரப்பினர் கூறுகையில், ஊரணியிலிருந்து காவலர் குடியிருப்பு வரை நீர்வரத்திற்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய் உள்ளது. ரோட்டின் மறுபுறத்திலுள்ள கண்மாயிலிருந்து வரும் வரத்துக்கால்வாய் பேரூராட்சி எல்லைக்குள் இல்லாததால் அதில் சீரமைக்க திட்டமிட முடியவில்லை.' என்றனர்.
சீரமைக்கப்பட்ட ஊரணிக்கு மழை காலத்தில் நீர் வரத்து ஏற்பட முழுமையாக கால்வாய் துார் வார வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கையை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சியினர் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

