/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்
ADDED : ஜூலை 23, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.7.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இடப்பிரச்னை, இலவச வீட்டு மனை பட்டா, அரசின் நலத்திட்ட உதவிகளை கேட்டு 490பேர் மனு அளித்தனர். இயற்கை மரண உதவி தொகை, கருணை அடிப்படையில் பணி நியமனம், பால் மாடு வளர்ப்பு கடனுதவி, ஆடு வளர்ப்பிற்கான கடனுதவி என 26 பயனாளிகளுக்கு ரூ.7.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.