sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை தொகுதியில் 1873 சாவடியில் இன்று ஓட்டுப்பதிவு   ஓட்டுச்சாவடிக்கு 7675 அலுவலர் நியமனம் 

/

சிவகங்கை தொகுதியில் 1873 சாவடியில் இன்று ஓட்டுப்பதிவு   ஓட்டுச்சாவடிக்கு 7675 அலுவலர் நியமனம் 

சிவகங்கை தொகுதியில் 1873 சாவடியில் இன்று ஓட்டுப்பதிவு   ஓட்டுச்சாவடிக்கு 7675 அலுவலர் நியமனம் 

சிவகங்கை தொகுதியில் 1873 சாவடியில் இன்று ஓட்டுப்பதிவு   ஓட்டுச்சாவடிக்கு 7675 அலுவலர் நியமனம் 


ADDED : ஏப் 19, 2024 05:27 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 1873 ஓட்டுச்சாவடியில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் தேர்தலுக்கு 7675 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இத்தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 1873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதற்காக 3746 ஓட்டுப்பதிவு இயந்திரம், தலா 1873 கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரம்தயார் நிலையில் உள்ளன.இந்த இயந்திரங்கள் அந்தந்த தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறையில் இருந்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கையில் தாசில்தார் சிவராமன், ஓட்டுப்பதிவு இயந்திரம் செல்லும்வாகனங்களுக்கு முன் சிதறு தேங்காய் உடைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தார். அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு நேற்று மாலை அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் சேர்ந்தன.

ஓட்டுச்சாவடிகளில் 7675 அலுவலர்கள்: ஓட்டுப்பதிவில் வாக்காளர் தடையின்றி ஓட்டளிக்க ஏதுவாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர், அவரது கீழ் 3 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணிபுரிவார்கள். 1200 ஓட்டுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிக்கு கூடுதலாக ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர் இருப்பார்கள்.

1200 ஓட்டுகளுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் 183 வரை உள்ளன. இங்கு கூடுதலாக ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர்பணியில் இருப்பார். ஓட்டுச்சாவடிகள் 1873-க்கு தேர்தலன்று ஓட்டுப்பதிவு பணிகளை கண்காணிக்க 7675 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

54 பறக்கும் படைகள் 'சுழலும்': சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடிக்கு வேட்பாளர்கள் வாகனங்களிலும், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து அழைத்து செல்லும் வேட்பாளரின் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்.ஓட்டுச்சாவடிக்கு 200 மீட்டருக்கு அப்பால் தற்காலிக வேட்பாளர் அலுவலகம் அமைத்து அதில், இருவர் மட்டுமே இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த 54 குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இது வரை 59 புகார்கள் வருகை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் வேட்பாளர், அவர்களது ஆதரவாளர், கட்சியினர் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில்செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை 38 பேர் புகார் செய்திருந்தனர்.

அந்த புகாரின் மீது உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர். அதே போன்று தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாதது குறித்து 'சி' விஜில்' ஆப்பில் புகார் பெற்றப்பட்டன.

ஓட்டுக்கும் பணம் கொடுத்தல், விதிமீறி பிரசாரம் என 21 பேர் இந்த ஆப்பில் புகார் செய்துள்ளனர். அப்புகார்கள் மீது உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.






      Dinamalar
      Follow us