/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிக்காக 80 ஆண்டு ஆலமரங்கள் அகற்றம்
/
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிக்காக 80 ஆண்டு ஆலமரங்கள் அகற்றம்
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிக்காக 80 ஆண்டு ஆலமரங்கள் அகற்றம்
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிக்காக 80 ஆண்டு ஆலமரங்கள் அகற்றம்
ADDED : ஆக 05, 2024 07:02 AM

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கத்திற்காக 80 ஆண்டு ஆலமரங்கள் அகற்றப்பட்டன.மாவட்ட தலைநகரான சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் வழியே சென்னை ---- ராமேஸ்வரம், திருச்சி -- ராமேஸ்வரம் மட்டுமின்றி ஏராளமான எக்ஸ்பிரஸ், வாராந்திர ரயில்கள் செல்கின்றன.
டெமு ரயில் மூலம் தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் மானாமதுரை, சிவகங்கையில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிக்கு அரசு, தனியார் நிறுவன ஊழியர்களாக சென்று வருகின்றனர்.
இது தவிர காரைக்குடி அழகப்பா பல்கலை, அரசு கல்லுாரி, பொறியியல் கல்லுாரிகளுக்கு அதிகளவில் மாணவர்கள் ரயிலில் சென்று வருகின்றனர். தற்போது வரை இந்த ரயில்வே ஸ்டேஷனில் 3 பிளாட்பாரம் அமைத்து, ரயில்கள் இயக்கி வருகின்றனர்.
மதுரை -- சென்னை இடையே அதிகளவில் ரயில்கள் இயக்கப்படுவதால், அப்பகுதியில் ஏற்படும் ரயில் போக்குவரத்தில் தடை ஏற்படுவதை தவிர்க்க, மானாமதுரை - சிவகங்கை - காரைக்குடி வழியாக ரயில்கள் சென்னைக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
தற்போதுள்ள 3 பிளாட்பார்ம்களில் ஒரே நேரத்தில் ரயில்களை நிறுத்தி வைக்கவும், கூடுதலாக ரயில்வே தண்டவாளங்களை சீரமைக்க தேவைப்படும் 'பேக்கிங் மெஷின்' உள்ளிட்ட ரயில்களை நிறுத்தி வைக்க சிவகங்கையில் கூடுதல் ரயில்வே தண்டவாளம் இல்லை.
இதனால் சிவகங்கையில் கூடுதலாக ஒரு ரயில்வே தண்டவாளம் அமைத்து பிளாட்பார்ம் உருவாக்கும் நோக்கில் 3வது பிளாட்பாரம் அருகே விரிவாக்க பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக இங்கு 80 ஆண்டுகள் பழமையான ஆலமரங்களை வேருடன் அகற்றி வருகின்றனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது: சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்க பணிக்காக, பழங்கால மரங்கள் உரிய அனுமதியுடன் வெட்டப்படுகின்றன. கூடுதல் பிளாட்பார்ம் அமைத்து, பிற ரயில் இன்ஜின்களை நிறுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர், என்றார்.