/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு 800 மாடுகள் பங்கேற்பு *40-க்கும் மேற்பட்டோர் காயம்

ADDED : மே 23, 2024 03:21 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 8--00க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. 40க்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர்.
திருவேட்டை அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.இதில் மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. 250க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுகளின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் வாடி வாசலிலிருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன .பின்னர் அவிழ்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர்.காயமடைந்தவர்களுக்கு கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும்,ஊழியர்களும் சிகிச்சை அளித்தனர். மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாமல் சென்ற மாடுகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.