/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் 85 மி.மீ., மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்
/
மானாமதுரையில் 85 மி.மீ., மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்
மானாமதுரையில் 85 மி.மீ., மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்
மானாமதுரையில் 85 மி.மீ., மழை; 3 வீடுகள் இடிந்து சேதம்
ADDED : ஆக 10, 2024 05:54 AM

சிவகங்கை : மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், அதிகபட்சமாக மானாமதுரையில் 85 மி.மீ., மழை பதிவானது. இதற்கு அடுத்து சிவகங்கை, காரைக்குடியில் 43 மி.மீ.,பதிவானது. தொடர் மழைக்கு ஓடு, கட்டட வீடுகள் 3 சேதமானது.
மாவட்டத்தில் ஆடி பெருக்கிற்கு பின் பரவலாக மாலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
குறிப்பாக ஆடிப்பட்டத்தில் மானாவாரியாக நடவு செய்ய விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக தொடர்ந்து மாலையில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் பெய்த மழை அளவு படி மானாமதுரையில் தான் அதிகபட்சமாக 85 மி.மீ., பதிவானது. அதனை தொடர்ந்து சிவகங்கை, காரைக்குடியில் 43, இளையான்குடி, காளையார்கோவிலில் 15.40, திருப்புவனம் 12.40, தேவகோட்டை - 6, திருப்புத்துார் 3.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்த மழைக்கு திருப்புத்துார், மானாமதுரை, காரைக்குடியில் 2 ஓட்டு வீடு, 1 கட்டட வீடுகள் பகுதி உடைந்து சேதமானது.
தொடர் மின்வெட்டு
மானாமதுரையில் நேற்று முன்தினம் இரவு சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மின் மோட்டார்களை இயக்க முடியாததால் குடிநீரும் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.