ADDED : மே 09, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையிலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பஸ் மேலப்பசலை அருகே எதிர்பாராத விதமாக ரோடு ஓரமாக நின்ற மண் அள்ளும் இயந்திரம் மீது மோதியது.
பஸ்சில் பயணம் செய்த மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த முத்துமாரி 37, அவரது கணவர் தாமஸ் 43, விருதுநகர் மாவட்டம் டி.வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராணி ஆகியோர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் மண் அள்ளும் இயந்திர டிரைவர் செந்தில்குமார் 34, மற்றும் சீமா, செந்தில்குமார்,சேவியர்,குணசுந்தரி, சார்லஸ் ஆகியோரும் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.