/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிளஸ் 2 தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி மாநிலத்தில் 2வது இடம்
/
பிளஸ் 2 தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி மாநிலத்தில் 2வது இடம்
பிளஸ் 2 தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி மாநிலத்தில் 2வது இடம்
பிளஸ் 2 தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி மாநிலத்தில் 2வது இடம்
ADDED : மே 07, 2024 05:17 AM
சிவகங்கை: பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் 97.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ல் துவங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வை 69 அரசுப்பள்ளிகள், 23 அரசு உதவி பெறும் பள்ளிகள், 53 மெட்ரிக் பள்ளிகள் உட்பட 163 அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 81 தேர்வு மையங்களில் எழுதினர். 6 ஆயிரத்து 707 மாணவர்கள், 8 ஆயிரத்து 218 மாணவிகள் உட்பட மொத்தம் 14 ஆயிரத்து 925 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில் மாணவர்கள் 6 ஆயிரத்து 469 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.45. மாணவிகள் 8 ஆயிரத்து 71 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.21. ஒட்டு மொத்தமாக 14 ஆயிரத்து 540 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.42 சதவீதம்.
கடந்த 2016 - 2017ம் ஆண்டில் 96.18சதவீதம், 2017--2018ம் ஆண்டு 95.60 சதவீதம், 2018-2019ம் ஆண்டு 97.31சதவீதம், 2019-2020ம் ஆண்டு 95.65 சதவீதம், 2020--21ம் ஆண்டு கொரோனா பரவலால் தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2021-2022ம் ஆண்டு 96.58 சதவீதம். 2022-2023ம் ஆண்டு 97.26 சதவீதம், 2023--2024ம் இந்த கல்வி ஆண்டு 97.42சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2016ம் ஆண்டில் 8ம் இட ம், 2017மற்றும் 2018ம் ஆண்டில் 6ம் இடம், 2019ம் ஆண்டு 11ம் இடம், 2020ம் ஆண்டு 7ம் இடம், 2022மற்றும் 2023ம் ஆண்டுகளில் 6ம் இடம் பிடித்தது. இந்த ஆண்டு மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தை விட 0.03 புள்ளிகள் மட்டுமே சிவகங்கை மாவட்டம் குறைந்துள்ளது.