/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் இரவில் பயணிகள் தவிப்பு பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்
/
நடுரோட்டில் இரவில் பயணிகள் தவிப்பு பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்
நடுரோட்டில் இரவில் பயணிகள் தவிப்பு பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்
நடுரோட்டில் இரவில் பயணிகள் தவிப்பு பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாத அரசு பஸ்
ADDED : மே 25, 2024 05:10 AM
மானாமதுரை : மானாமதுரையில் இருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் இரவு நேரங்களில் புது பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் நேராக டெப்போவிற்கு செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து திருப்பாச்சேத்தி,திருப்புவனம்,கட்டிக்குளம், சின்ன கண்ணனூர், நரிக்குடி,இளையான்குடி,பரமக்குடி, தாயமங்கலம்,வீரசோழன்,சிவகங்கை, சாத்தரசன்கோட்டை, காளையார்கோயில் உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் நாள் முழுவதும் கிராம பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு கடைசி ட்ரிப் சென்று வரும் வழியில் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் வராமல் நேராக சிவகங்கை அல்லது மானாமதுரை சிப்காட்டில் உள்ள டெப்போவிற்கு சென்று விடுகிறது.
இதுகுறித்து கட்டிக்குளம் கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து கடைசி ட்ரிப் செல்லும் டவுன் பஸ் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் அண்ணாத்துரை சிலை பஸ் ஸ்டாப்பிலேயே பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு சிவகங்கை அல்லது மானாமதுரை சிப்காட்டிலுள்ள பணிமனைக்கு சென்று விடுகிறது. புது பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல முடியாமல் கூடுதலாக பணம் செலவழித்து ஆட்டோவில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் இருந்து மானாமதுரை வரும் டவுன் பஸ்களை மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு பிறகு பணிமனைக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது: இப்பிரச்னை குறித்து ஏற்கனவே புகார் வந்ததையடுத்து டிரைவர்களிடம் இரவு நேரங்களில் பஸ்களை மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்று விட்டு பின்னர் பணிமனைக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.

