ADDED : ஆக 15, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவ கல்லுாரியில் பணியில் உள்ள பெண் டாக்டர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மருத்துவமனை வளாகத்திலேயே கொலை செய்ததை கண்டித்து கண்டன ஊர்வலம் நடந்தது.
டாக்டர் கிரண் குமார் தலைமை வகித்தார். பயிற்சி டாக்டர் ஆண்டோ முன்னிலை வகித்தார். மருத்துவ மாணவ நிர்வாகிகள் நிமல்ராஜா, நிகிலேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டனர்.