/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறிய ஜவுளிபூங்கா அமைக்கும் திட்டம்
/
சிறிய ஜவுளிபூங்கா அமைக்கும் திட்டம்
ADDED : செப் 09, 2024 05:57 AM
சிவகங்கை ; சிவகங்கையில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் செப்., 24 கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜவுளித்துறையில் முன்னோடி திட்டத்தின் கீழ் குறைந்தது 2 ஏக்கரில் ஜவுளி உற்பத்தி தொழிற்கூடம் அமைக்க வேண்டும். இதற்கான திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.5 கோடி இதில், எது குறைவானதோ அவற்றை தமிழக அரசு மானியமாக வழங்கும். சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதின் மூலம் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து, வேலைவாய்ப்பு, அன்னிய செலாவணியை ஈட்டித்தரும்.
இதற்கான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்., 24 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறும். இதில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து தொழில் முனைவோர், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர் பங்கேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கும் திட்ட கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கலாம், என்றார்.