/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாற்றமெடுக்கும் குப்பைக்கிடங்கு கவனிப்பாரற்ற சமுதாயக்கூடம்
/
நாற்றமெடுக்கும் குப்பைக்கிடங்கு கவனிப்பாரற்ற சமுதாயக்கூடம்
நாற்றமெடுக்கும் குப்பைக்கிடங்கு கவனிப்பாரற்ற சமுதாயக்கூடம்
நாற்றமெடுக்கும் குப்பைக்கிடங்கு கவனிப்பாரற்ற சமுதாயக்கூடம்
ADDED : ஜூலை 16, 2024 11:58 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்கு, கவனிப்பாரற்ற சமுதாயக்கூடம் என அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
இப்பேரூராட்சியின் 17 வது வார்டுக்குட்பட்ட கக்கன் நகர், முத்தையா காலனி உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதி குறைவால் மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர். இத்தெருவுக்கு செல்லும் தார் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த நிலையில் இன்னும் சீரமைக்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கக்கன் நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறக்கப்படாமலேயே காலாவதி ஆகிப்போனது.
அவற்றில் உள்ள கதவு ஜன்னல் மின்சாதன பொருட்கள் சேதமடைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபத்தை மீண்டும் மராமத்து செய்த அதிகாரிகள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.
மண்டபத்தைச் சுற்றி முள் செடிகளும் புதர்களும் மண்டி, பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளது.
இத்தெருக்கள் அருகே சில மீட்டர் துாரத்தில் செயல்படும் நகருக்கான குப்பை கிடங்கில் கோழி, மீன் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
புதைக்கப்படும் அக்கழிவுகளை நாய்கள் தோண்டி எடுப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சமுதாய கூடத்தை சீரமைத்து குப்பைக்கிடங்கை முறையாக பராமரிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.