/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களில் விடப்படும் நாய்களால் விபத்துக்கள்
/
கிராமங்களில் விடப்படும் நாய்களால் விபத்துக்கள்
ADDED : செப் 18, 2024 06:10 AM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே வெளியூரில் இருந்து கொண்டு வந்து விடப்படும் தெரு நாய்கள் கூட்டமாக திரிவதால் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.
சமீபகாலமாக வெளி மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார நகர் பகுதிகளில் பராமரிக்க முடியாத மற்றும் பிடிக்கப்பட்ட நாய்களை சிலர் வேன்களில் கொண்டு வந்து இவ்வொன்றியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் விடுகின்றனர்.
அவை கூட்டமாக ஒன்று கூடி அடிவார கிராமங்களை வலம் வருகின்றன. இந்நாய்கள் பள்ளிகளுக்கு சைக்கிள் செல்லும் மாணவர்களை விரட்டி வருகின்றன.
நடு ரோட்டில் நாய்கள் கூடுவதால் டூவீலரில் செல்பவர்கள் அவற்றில் மோதி விழுந்து காயமடைகின்றனர். அனைத்து நாய்களையும் பிடிக்க ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.