/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை சிறுவாச்சி குறுகிய ரோட்டில் தொடரும் விபத்து
/
தேவகோட்டை சிறுவாச்சி குறுகிய ரோட்டில் தொடரும் விபத்து
தேவகோட்டை சிறுவாச்சி குறுகிய ரோட்டில் தொடரும் விபத்து
தேவகோட்டை சிறுவாச்சி குறுகிய ரோட்டில் தொடரும் விபத்து
ADDED : மார் 10, 2025 05:04 AM

தேவகோட்டை,: தேவகோட்டை -- சிறுவாச்சி குறுகிய ரோட்டில் தொடரும் விபத்துக்களால் பயணிகள் அச்சத்தில் தவிக்கின்றனர். -
தேவகோட்டையில் இருந்து சிறுவாச்சி வழியாக ஏம்பல், புதுவயல் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் தாழையூர் பகுதியில் இருந்து சிறுவாச்சி பூதங்குடி வரை வளைவுகள் அதிகம். மேலும் ரோடு முற்றிலும் குறுகலாகவே உள்ளது. சிறுவாச்சியை தாண்டி ரோட்டோரம் அடர்ந்திருக்கும் முட்செடிகளால் பஸ் போக்குவரத்தை சில நாட்கள் டிரைவர்கள் நிறுத்தினர். தினமலர் செய்தி எதிரொலியால் மரங்கள் வெட்டப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் தேரளப்பூர் ஞானஒளிபுரம் அருகே குறுகிய வளைவில் விபத்துகள் தொடர்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி குழந்தைகள் ஏற்றி சென்ற டூவீலர் விபத்தில் வாலிபர் பலியானார். அதற்கு முன் இருவர் இறந்தனர். அது போக பலரும் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். நேற்று மதியம் குடிகாடு கிராமத்தில் இருந்து அரசு டவுன் பஸ் இந்த ரோட்டில் தேவகோட்டைக்கு வந்தது.
அப்போது ஏம்பலை சேர்ந்த சின்னமுத்து எதிரே டூவீலரில் சென்றார். ஞானஒளிபுரம் அருகே குறுகிய வளைவில் திரும்பும் போது டவுன் பஸ்சில் மோதியது. மோதலை தவிர்க்க நினைத்த போது பஸ் பள்ளத்தில் இறங்கியது. பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர். டூவீலரில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.