/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை
/
பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை
பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை
பயணிகளை ஏற்ற மறுக்கும் பஸ்கள் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை
ADDED : ஜூன் 02, 2024 03:43 AM
திருப்புவனம்: திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல்பயணிகளை ஏற்ற மறுக்கும் மதுரை கோட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக கமுதி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மதுரை கோட்டத்திற்குட்பட்ட பேருந்துகளும் அடக்கம். ஒன் டூ ஒன், ஒன் டூ த்ரீ, இடைநில்லா பேருந்து உள்ளிட்ட பேருந்துகள் தவிர, மற்ற அனைத்து பேருந்துகளும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் நின்று செல்ல வேண்டும் என்பது விதி.
கும்பகோணம் கோட்ட பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் நிற்பது கிடையாது, பயணிகளை ஏற்றுவதும் கிடையாது. கும்பகோணம் கோட்ட பேருந்துகள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுத்தாலோ ஊருக்குள் செல்ல மறுத்தாலோ உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பேருந்துகளை தொடர்ச்சியாக டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணித்தும் வருகின்றனர். ஆனால் மதுரை கோட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் மதுரை கோட்ட பேருந்துகள் தொடர்ந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிறுத்தங்கள் இருந்தும் பயணிகளை ஏற்ற மறுக்கும் போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.