/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கைக்கு கூடுதலாக 816 ஓட்டுப்பதிவு இயந்திரம்
/
சிவகங்கைக்கு கூடுதலாக 816 ஓட்டுப்பதிவு இயந்திரம்
ADDED : ஏப் 04, 2024 05:01 AM

சிவகங்கை : சிவகங்கை தொகுதிக்கு தென்காசியில் இருந்து 816 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமயத்தில் ஆண் 1,14,124,பெண் 1,20,060, இதர பாலினத்தவர் 5, ஆலங்குடியில் ஆண் 1,04,988,பெண் 1,06,292, இதரர் 3, காரைக்குடியில் ஆண் 1,54,209, பெண், 1,59,630, இதரர் 47, திருப்புத்துாரில் ஆண் 1,45,143, பெண் 1,51,306,இதரர் 3, சிவகங்கையில் ஆண் 1,46,224, பெண் 1, 51,667, இதரர் 3, மானாமதுரை (தனி) யில் ஆண் 1,37,595, பெண் 1,42,556, இதரர் 2 என 6 சட்டசபை தொகுதிகளில் ஆண் 8,02,283, பெண் 8,31,511, இதர பாலினத்தவர் 63 பேர் என 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் தேசிய, மாநில கட்சிகள், சுயேச்சை உட்பட 20 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் ஒரு ஓட்டுச்சாவடிக்கு இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும். இதற்காக கூடுதலாக 816 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தென்காசியில் இருந்து நேற்று சிவகங்கை வந்தது.
இந்த இயந்திரங்கள் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், சர்வ கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் கோடவுனில் வைக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) ஜான்சன் தேவசகாயம்,தாசில்தார் மேசியாதாஸ், சிவகங்கை தாசில்தார் சிவராமன் பங்கேற்றனர்.

