/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதை நெல் சுத்திகரிப்பு மையத்திற்கு கூடுதல் கட்டடம்
/
விதை நெல் சுத்திகரிப்பு மையத்திற்கு கூடுதல் கட்டடம்
விதை நெல் சுத்திகரிப்பு மையத்திற்கு கூடுதல் கட்டடம்
விதை நெல் சுத்திகரிப்பு மையத்திற்கு கூடுதல் கட்டடம்
ADDED : பிப் 22, 2025 10:37 PM
திருப்புவனம் : திருப்புவனத்தில் விதை நெல்லை சுத்திகரித்து இருப்பு வைக்க கூடுதல் கட்டடம் கையகப்படுத்த மாவட்ட வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், தேவகோட்டை, சிவகங்கை ஆகிய மூன்று இடங்களில் மட்டும் விதை நெல் சுத்திகரிப்பு மையம் மாவட்ட வேளாண்துறை சார்பில் செயல்படுகிறது.
திருப்புவனத்தில் 2014ல் விதை நெல் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு இங்கு விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
அதிகாரிகள் கூறுகையில்: திருப்புவனத்தில் பிப்ரவரி ஏழாம் தேதி முதல் விதை நெல் சுத்திகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மார்ச் கடைசி வரை பணி நடைபெறும், தற்போது 40 டன் வரை சுத்திகரித்து இருப்பு வைக்க இடவசதி உள்ளது. கூடுதலாக 500 டன் வரை இருப்பு வைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது,என்றனர்.

