/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் திட்டம் வரும் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் உறுதி
/
காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் திட்டம் வரும் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் உறுதி
காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் திட்டம் வரும் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் உறுதி
காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் திட்டம் வரும் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர் தாஸ் உறுதி
ADDED : ஏப் 07, 2024 05:47 AM

சிவகங்கை : தி.மு.க., கிடப்பில் போட்ட காவிரி- வைகை- குண்டாறு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முழு முயற்சி எடுப்பேன்'' என மானாமதுரையில் நடந்த பிரசாரத்தில் சிவகங்கை அ.தி.மு.க., வேட்பாளர் ஏ.சேவியர் தாஸ் பேசினார்.
மானாமதுரை தொகுதிக்கு உட்பட்ட கல்குறிச்சி முதல் இடைக்காட்டூர், தஞ்சாக்கூர், ராஜகம்பீரம் உட்பட 54 கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீதரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் இளங்கோ, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார் உட்பட அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.பிரசாரத்தில் வேட்பாளர் சேவியர்தாஸ் பேசியதாவது: காவிரி - வைகை - குண்டாறு கால்வாய் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்தார். ஆனால், அந்த திட்டத்தை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டது.
அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தேன்.
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்கப்படும்.
* 40 தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி:தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் சமுதாயக்கூடம், ைஹமாஸ் விளக்கு, ரோடு வசதி செய்து தரப்படும். தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
அ.தி.மு.க.,விற்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். கடந்த 35 ஆண்டாக சிதம்பரம் எம்.பி.,யாகி 7 முறை நிதி, உள்துறை அமைச்சர் பதவி வகித்தார்.
அதே போன்று அவரது மகன் கார்த்தி கடந்த தேர்தலில் 3.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 40 ஆண்டுக்கு முன் சிவகங்கை எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

