ADDED : மே 31, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், வேட்பாளர் சேவியர்தாஸ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கோபி, செல்வமணி, கருணாகரன், அருள் ஸ்டீபன், பழனிசாமி, சிவாஜி கலந்து கொண்டனர்.