/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., பிரசாரத்திற்கு மறுப்பு தி.மு.க.,வினருக்கு அனுமதி
/
அ.தி.மு.க., பிரசாரத்திற்கு மறுப்பு தி.மு.க.,வினருக்கு அனுமதி
அ.தி.மு.க., பிரசாரத்திற்கு மறுப்பு தி.மு.க.,வினருக்கு அனுமதி
அ.தி.மு.க., பிரசாரத்திற்கு மறுப்பு தி.மு.க.,வினருக்கு அனுமதி
ADDED : ஏப் 07, 2024 06:09 AM
இளையான்குடி : இளையான்குடியில் வாள் மேல் நடந்த அம்மன் திடலில் பிரசாரம் செய்வதற்கு அ.தி.மு.க.,வினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று தி.மு.க.,வினருக்கு மட்டும் அனுமதி வழங்கிய போலீசார் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இளையான்குடி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி உள்ளிட்ட பலர் பிரசாரம் செய்தனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் திடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்வதற்கு இளையான்குடி போலீசில் அனுமதி கேட்ட போது அங்கு பிரசாரம் நடத்த அனுமதி இல்லையென மறுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அங்கு தி.மு.க., அமைச்சர் பெரிய கருப்பன் பிரசாரம் செய்துள்ளார்.
இதுகுறித்து இளையான்குடி அ.தி.மு.க. நகர செயலாளர் நாகூர் மீரா கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்கள் கட்சியை சேர்ந்த நடிகர், வாள் மேல் நடந்த அம்மன் திடலில் பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்ட நிலையில் இளையான்குடி போலீசார் அங்கு பிரசாரம் நடந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி பிரசாரத்திற்கு அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் நேற்று ஆளும் கட்சியை சேர்ந்த தி.மு.க., அமைச்சர் பெரிய கருப்பனுக்கு மட்டும் பிரசாரம் செய்ய இளையான்குடி போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து இளையான்குடி அ.தி.மு.க., சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் இளையான்குடி போலீசார் மீது புகார் கொடுத்துள்ளோம். மேலும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் இளையான்குடி போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினர்.

