ADDED : மார் 02, 2025 05:33 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு நவ. 2024 நடந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களில் பாடம் ஒன்றுக்கு ரூ.600 வரைவோலை (பதிவாளர், அழகப்பா பல்கலை காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரைவோலை (பதிவாளர், அழகப்பா பல்கலை காரைக்குடி) செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் www.alagappauniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்வாணையர் மு.ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.