/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை ரஸ்தாவில் அனைத்து ரயில்கள் நிற்க கோரிக்கை
/
தேவகோட்டை ரஸ்தாவில் அனைத்து ரயில்கள் நிற்க கோரிக்கை
தேவகோட்டை ரஸ்தாவில் அனைத்து ரயில்கள் நிற்க கோரிக்கை
தேவகோட்டை ரஸ்தாவில் அனைத்து ரயில்கள் நிற்க கோரிக்கை
ADDED : ஏப் 29, 2024 11:54 PM
தேவகோட்டை : தேவகோட்டை வர்த்தக சங்கம், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு, காரைக்குடி ரயில் பயணிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க தலைவர் மகபூப் பாட்சா தலைமையில் நடந்தது. லயன்ஸ் சங்க சரவணன் வரவேற்றார். காரைக்குடி நகராட்சி துணை தலைவர் குணசேகரன், தேவகோட்டை நகராட்சி துணை தலைவர் ரமேஷ், ரயில்வே கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு தலைவர் சாமி திராவிடமணி பேசினர்.
தேவகோட்டை ரஸ்தாவில் இரு ரயில்கள் மட்டுமே நிற்கிறது. கன்னியாகுமரி புதுச்சேரி ரயில், கொல்லம் சென்னை ரயில் நிற்பது இல்லை. சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து வரும் போது தேவகோட்டையில் நிற்பது இல்லை. அனைத்து ரயில்களும் தேவகோட்டை ரஸ்தாவில் நின்று செல்ல வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மஸ்தான் கனி நன்றி கூறினார்.