/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை-மேலுார் 4 வழி சாலைக்கு ரூ.15.5 கோடி ஒதுக்கீடு
/
சிவகங்கை-மேலுார் 4 வழி சாலைக்கு ரூ.15.5 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை-மேலுார் 4 வழி சாலைக்கு ரூ.15.5 கோடி ஒதுக்கீடு
சிவகங்கை-மேலுார் 4 வழி சாலைக்கு ரூ.15.5 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 12, 2024 11:53 PM
சிவகங்கை : சிவகங்கை பழைய கோர்ட் வாசல் முதல் பைபாஸ் ரோடு சந்திப்பு வரை நான்கு வழிச்சாலைக்கு ரூ.15.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேலுார் ரோட்டில் சிவகங்கை காமராஜர் காலனி முதல் வி.மலம்பட்டி வரையிலான இரு வழிச்சாலையை ரூ.78 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை ஆக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலுார் ரோட்டில் தஞ்சாவூர்-மானாமதுரை பைபாஸ் ரோட்டை இணைக்கும் விதத்தில், சிவகங்கை பழைய கோர்ட் வாசல் முதல் பைபாஸ் ரோடு வரையிலான 2 கி.மீ., இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த, அரசு முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.15.5 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் பழைய கோர்ட் வாசலில் இருந்து, பைபாஸ் ரோடு சந்திப்பு வரை ரோட்டின் இருபுறத்திலும் தலா 7.5 மீட்டர் துாரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்யப்படும்.
ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்துதருமாறு, சிவகங்கை தாசில்தார் சிவராமனிடம் நெடுஞ்சாலைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

