நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் அருகே அம்மாபட்டி புனித அலங்கார அன்னை சர்ச் தேர்ப்பவனி நடந்தது.
இங்கு ஆக.,. 9 ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலை சிறப்பு கூட்டு திருப்பலி, ஆராதனைகள் நடந்தன. புனித அமல அன்னை சர்ச் பங்குதந்தை அற்புதஅரசு திருப்பலி நடத்தினார். அலங்கார அன்னை மற்றும் காவல் தூதர் மைக்கேல் சம்மனசு, சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வைத்தனர். திருப்பலியுடன் சொரூபங்களுக்கு புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகள் நடந்த பின் இரவு 11:25 மணிக்கு தேர்பவனி துவங்கியது. அம்மாபட்டி, இரணியூர், செண்பகம்பேட்டை, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி, சிறுகூடல்பட்டி பகுதி மக்கள் பங்கேற்றனர்.

