/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ்க்கு சிக்கல்
/
ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ்க்கு சிக்கல்
ADDED : செப் 17, 2024 05:51 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆக்கிரமிப்புகளால் மருத்துவமனை சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு வார்டுகளில் ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது. குறிப்பாக கூத்தாடி அம்மன் கோயில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள், வியாபாரிகள்போட்டி போட்டு ரோட்டை ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்.
அச்சாலை வழியாக பெரிய வாகனங்கள் செல்ல முடியாது என்ற நிலை ஏற்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் சாலையிலிருந்து அரசு மருத்துவமனை ரோட்டில்ஆக்கிரமிப்பு பெருகுவதால் அவசர காலங்களில் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்வதில்சிக்கல் ஏற்படுகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்தை எளிமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

