/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி; டிரைவர் காயம்
/
விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி; டிரைவர் காயம்
விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி; டிரைவர் காயம்
விபத்தில் சிக்கியது ஆம்புலன்ஸ் செவிலியர் பலி; டிரைவர் காயம்
ADDED : பிப் 28, 2025 01:40 AM
சிவகங்கை, :சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே நேற்று அதிகாலை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் செவிலியர் பலியானார். டிரைவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவகோட்டையைச் சேர்ந்த மாலா 40, அங்குள்ள தனியார் மருத்துவனையில் செவிலியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றிக்கொண்டு மதுரை தனியார் மருத்துவனையில் அனுமதித்து விட்டு தேவகோட்டைக்கு திரும்பினார். ஆம்புலன்ைஸ காரைக்குடி பெரியண்ணன் 45, ஓட்டினார்.
அதிகாலை 4:00 மணியளவில் ஆம்புலன்ஸ் நாட்டரசன்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காளையார்கோவில் போலீசார், தீயணைப்பு துறையினர் டிரைவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸ் பின்பகுதியில் சிக்கி மாலா பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.