/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட யானை
/
நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட யானை
ADDED : மே 01, 2024 07:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில், 1999ம் ஆண்டில் 3 வயதில் பெண் யானை வாங்கி சொர்ணவல்லி என பெயரிட்டு வளர்த்து வருகின்றனர்.
இந்த யானைக்கு வயது 29 ஆகிறது. கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் கட்டியுள்ளனர்.
கோடை உஷ்ணத்தை தணிக்க நேற்று மதியம் நீச்சல் குளத்தில் இறங்கி, குளத்திற்குள் அமர்ந்து கொண்ட யானை, தனது தும்பிக்கையால் தண்ணீரை உடலில் பீய்ச்சி அடித்து மகிழ்ந்து சூட்டை தணித்தது.