/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆந்திரா குண்டூர் மிளகாய் அதிகம் பயிரிட வேண்டும்: கலெக்டர் பேச்சு
/
ஆந்திரா குண்டூர் மிளகாய் அதிகம் பயிரிட வேண்டும்: கலெக்டர் பேச்சு
ஆந்திரா குண்டூர் மிளகாய் அதிகம் பயிரிட வேண்டும்: கலெக்டர் பேச்சு
ஆந்திரா குண்டூர் மிளகாய் அதிகம் பயிரிட வேண்டும்: கலெக்டர் பேச்சு
ADDED : ஆக 21, 2024 07:22 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாயிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ஆந்திரா குண்டூர் மிளகாய் பயிரிட்டு லாபம் பெற வேண்டும், என காளையார்கோவிலில் நடந்த ஏற்றுமதிக்கு உகந்த மிளகாய் பயிர் சாகுபடி கருத்தரங்கில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.
காளையார்கோவிலில் தோட்டக்கலைத்துறை மூலம் நடந்த கருத்தரங்கிற்கு கலெக்டர் தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குருமணி வரவேற்றார்.
வேளாண் இணை இயக்குனர் லட்சுமி பிரபா, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், வேளாண் துணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் செல்வராஜ், விமலேந்திரன், போடி நறுமண பயிர்கள் வாரிய உதவி இயக்குனர் செந்தில்குமரன், சிவகங்கை பைசஸ் பூங்கா மேலாளர் மோகன், உதவி இயக்குனர்கள் சக்திவேல், தர்மர் பேசினர்.
குண்டூர் மிளகாய் பயிரிடுங்கள்
கலெக்டர் பேசியதாவது: இன்றைக்கு ஏற்படும் பருவ நிலை மாற்றத்திற்கேற்ற பயிர்களை பயிரிட்டு லாபம் பெற வேண்டும். மண்ணின் மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளும் மாற்றம் பெற வேண்டும். அப்போது தான் உங்கள் நிலங்களும் இயற்கை விவசாய நிலமாக மாறும். 'E-narm' இணையதளத்தில் மிளகாய் விவசாயிகள், ஏற்றுமதியாளர், வியாபாரிகள் பதிவு செய்திருப்பார்கள்.
விவசாயிகள் தங்களது மிளகாய் வத்தல் இருப்பு விபரத்தை பதிவு செய்தால், ஏற்றுமதியாளர் நேரடி கொள்முதல் செய்வார்கள்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக ஆந்திரா குண்டூர் மிளகாய் பயிரிடுவதை அதிகரித்து, அதிக லாபம் பெற விவசாயிம் முன் வர வேண்டும். இக்கருத்தரங்கு மூலம் விவசாயிகள் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்திருப்பீர்கள்.
இதை பயன்படுத்தி மிளகாய் விளைச்சலை அதிகரித்து ஏற்றுமதி செய்வதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், என்றார். கருத்தரங்கில் 24 விவசாயிகளுக்கு ரூ.7.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இளையான்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் எம்.பாண்டியராஜ் நன்றி கூறினார்.
தோட்டக்கலை அலுவலர்கள் தன்ராஜ், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.