நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், மற்றும் வாஸ்துசாந்தியுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் விநாயகருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன. மூலவர் பைரவருக்கும், பரிவார தெய்வங்களான கோரக்கர், தண்டாயுதபாணி, உலிவீரன் ஆகியோருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தன.