ADDED : மார் 11, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயில் முதலாமாண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் 2024 பிப்.21ல் நடந்தது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமம் மற்றும் வாஸ்துசாந்தியுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, மூலவருக்கு புனித நீரால் வருடாபிஷேகம் நடந்தது. சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மேலும் சங்கிலி கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாட்டினை அறங்காவலர் குழுத் தலைவர் வைரவன் தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.