ADDED : செப் 12, 2024 04:46 AM
சிவகங்கை: நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தேவகோட்டை, சிங்கம்புணரியில் காலியாக உள்ள தற்காலிக சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேவகோட்டை நகராட்சி, சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது 35க்குள், ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறன், தகவல் தொடர்பு திறனில் ஒரு ஆண்டு அனுபவம் அவசியம். கூட்டமைப்பு உறுப்பினராக இருப்பது அவசியம்.
இதற்காக நகர்புற வாழ்வாதார இயக்க கூட்டமைப்பின் பரிந்துரை கடிதம் அல்லது தீர்மானம் நகல் சமர்பிக்க வேண்டும். டூவீலர் ஓட்டுபவராக லைசென்ஸ் உடன் இருத்தல் வேண்டும். இப்பணியில் சேர விரும்புவோர் செப்., 17 அன்று மாலை 5:00 மணிக்குள் மேலாளர், நகர்புற வாழ்வாதார மையம், (சி.எல்.சி.,) சிவகங்கை நகராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.

