/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணிநிறைவு பெற்றோருக்கு பாராட்டு விழா
/
பணிநிறைவு பெற்றோருக்கு பாராட்டு விழா
ADDED : மே 02, 2024 05:20 AM
சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட துணை தலைவர் அந்தோணிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் செல்லப்பாண்டியன் வரவேற்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை உயர்நிலை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் குமரேசன், வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன், ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில பொது செயலாளர் வாசுகி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் தவிடன், நிலஅளவை அமைச்சுப்பணிஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செந்தில்குார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், முன்னாள் மாவட்ட தலைவர் அழகேசன், சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில செயலாளர் பிச்சை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், துணை தலைவர் நாச்சியப்பன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

