/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொட்டித் தீர்த்த மழை நிரம்பாத நீர்நிலைகள்
/
கொட்டித் தீர்த்த மழை நிரம்பாத நீர்நிலைகள்
ADDED : ஜூலை 13, 2024 05:08 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில் பெரும்பாலான நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் முக்கிய நீர்நிலைகளுக்கு செல்லும் கால்வாய்கள் துார்வாரப்படாததாலும் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டுள்ளதாலும் அவற்றிற்கு தண்ணீர் சென்று சேராமல் வீணானது.
இனி வரும் காலங்களில் மழை நீரை முழுமையாக சேகரிக்க பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவகோட்டையில் நேற்று மாலை பலத்தகாற்று, இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.மிதமான மழை இரவு முழுவதும்
பெய்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை
இருந்தது. கடந்த ஒரு வாரமாக இரண்டு நாளுக்கு ஒரு முறை மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான நிலை உருவாகியுள்ளது.