/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அகற்றப்படுமா சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் மீண்டும் பணியை விரைவு படுத்த கோரிக்கை
/
அகற்றப்படுமா சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் மீண்டும் பணியை விரைவு படுத்த கோரிக்கை
அகற்றப்படுமா சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் மீண்டும் பணியை விரைவு படுத்த கோரிக்கை
அகற்றப்படுமா சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் மீண்டும் பணியை விரைவு படுத்த கோரிக்கை
ADDED : மே 30, 2024 03:22 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. கருவேல மரங்கள், பருவமழை பெய்ய விடாமல் தடுப்பதுடன், நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி பூமிக்கடியில் உள்ள நீரின் அளவை குறைக்கிறது. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.முதல்வர் ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக கண்மாய்கள், வரத்து கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகளை மேற்கொண்டு, நீர்நிலைகளை சீரமைத்திட அறிவுறுத்தி உள்ளார்.2024 மே 8ல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஊரகப்பகுதிகள், பேரூராட்சிகள், நகராட்சிப்பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்திடவும், அவ்விடங்களில் புதிதாக நிழல் தரும் மரங்கள், பலன்தரும் மரங்களை நடவு செய்திடவும், விதைகள் துாவி புதிய மரம்,செடிகளை உருவாக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2022ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், குட்டை, வரத்துகால்வாய், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதில் கடந்த 2 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.,மாவட்ட செயலாளர் கந்தசாமி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தற்போது கைவிடப்பட்டது போலவே முடங்கிக்கிடக்கிறது. மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நீர் நிலைகள் மற்றும் வைகை ஆற்றிலும் பாசனத்தை கெடுக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்கள் பரவிக் கிடக்கின்றன. மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்றியும் காண்மாய்களை துார்வாரி மழை நீரை சேகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.