/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுப்புது வழக்குகளில் கைது: யூடியூபர் சவுக்கு சங்கர்
/
புதுப்புது வழக்குகளில் கைது: யூடியூபர் சவுக்கு சங்கர்
புதுப்புது வழக்குகளில் கைது: யூடியூபர் சவுக்கு சங்கர்
புதுப்புது வழக்குகளில் கைது: யூடியூபர் சவுக்கு சங்கர்
ADDED : ஆக 12, 2024 11:18 PM

சிவகங்கை : புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகிறேன் என சிவகங்கையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
பெண் போலீைஸ அவதுாறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது சிவகங்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையில் மதகுபட்டி எஸ்.ஐ., சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் மே 6ல் சவுக்கு சங்கர் மீது கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது.
இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மதுரை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை நேற்று சிவகங்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் அவரை ஜாமீனில் நீதிபதி ஆப்ரின் பேகம் விடுவித்தார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் கூறுகையில்,''சென்னையில் நடக்கும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை நான் வெளியே வராத வகையில் தினமும் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகிறேன்.
நான் புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்,'' என்றார். பின் போலீசார் அவரை மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

