/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆவின் கொள்முதல் குறைந்தது; வாகன ஒப்பந்தம் காலாவதி; பால் பாக்கெட் தட்டுப்பாடு

ADDED : ஏப் 10, 2024 05:58 AM
காரைக்குடி : சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் அளவு குறைந்ததுள்ளதால் பால் பாக்கெட்டிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதம் ராமநாதபுரத்தில் 25 சதவீதம் வீதம் என பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டது. 515 சொசைட்டி மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு 90 ஆயிரம் லிட்டர் வரை விற்பனை நடந்து வந்தது.
காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை விற்பனை நடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து போதிய அளவு பால் கொள்முதல் செய்யப்படாததால் பால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
பால் கொள்முதல் செய்யும் வாகனங்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் கொள்முதலில் சிக்கல் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கூறுகையில்: ஆவின் நிறுவனத்திற்கு போதிய பால் கிடைக்காமல் நிறைய சென்டர் அமைத்து வருகிறோம். எங்கு பால் கிடைத்தாலும் தேடிச்சென்று கொள்முதல் செய்யும் சூழ்நிலை உள்ளது.
தேர்தல் வருவதால், பால் கொள்முதல் செய்யும் வாகன ஒப்பந்தம் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் வாகன ஒப்பந்தம் கொடுத்து விடுவோம் என்றார்.