ADDED : செப் 12, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களிலும், தினசரி அர்த்த சாம பூஜைகளும் சிறப்பு.
நேற்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணி அளவில் மூலவர் சன்னதியில் ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து 11 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது.