/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குவதால் பாதிப்பு
/
மானாமதுரையில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குவதால் பாதிப்பு
மானாமதுரையில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குவதால் பாதிப்பு
மானாமதுரையில் தென்னை மரங்களில் வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குவதால் பாதிப்பு
ADDED : மார் 23, 2024 05:38 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் தென்னை மரங்களை வெள்ளை சுருள் ஈக்கள் தாக்குவதால் மகசூல் குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை தாலூகாவிற்குட்ட தெற்குசந்தனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்கள் உள்ள நிலையில் இங்கு விளையும் தேங்காய், மற்றும் தேங்காய் மட்டை, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் நன்கு வருவாய் சிவகங்கை மாவட்டத்திற்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தென்னை மரங்களை தொடர்ந்து பூச்சிகள் தாக்கி வருவதால் தென்னை மரங்களை காப்பாற்றுவதற்கு விவசாயிகள் போராடி வருவதாக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜெயராமன் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது; கேரள வாடல் நோய், தஞ்சை வாடல் நோய், குருத்து அழுகல், இலை கருகல் நோய் ஆகியவை தென்னையை தாக்கும் நோய்களாகும், இதுபோல் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, செம்பான் சிலந்தி, கருந்தலை புழு போன்ற பூச்சிகளால் தென்னை மரங்கள் தாக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெள்ளை சுருள் ஈ தென்னையில் சேதத்தை விளைவித்து வருகிறது.
வெள்ளை சுருள் ஈக்கள் கூட்டம், கூட்டமாகத் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தஞ்சமடையும்.
காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மரத்தில் இருந்து அடுத்தடுத்த மரங்களுக்கும், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தென்னையின் உற்பத்தி அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது.
இதனால் வெள்ளை சுருள் ஈக்களை கட்டுப்படுத்த வேளாண்மை துறையினர் பரிந்துரை செய்யும் கருவிகள் மற்றும் மருந்துகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

