ADDED : மார் 30, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலிலிருந்து கட்டிக்குளம் செல்லும் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கடையை பூட்டி சென்ற நிலையில் அதிகாலை 3:00 மணிக்கு ஆயுதங்களுடன் வந்தவர்கள் கடை பூட்டுகளை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பூட்டை உடைக்க முடியாததால் அருகில் உள்ள பாரின் கதவை உடைத்து உணவுப் பொருட்கள் மற்றும் காஸ் சிலிண்டர், அடுப்பு போன்றவற்றை திருடி விட்டு கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சென்றனர்.

