/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர் இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மறியலுக்கு முயற்சி சமரச கூட்டம் மூலம் தீர்வு
/
பயிர் இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மறியலுக்கு முயற்சி சமரச கூட்டம் மூலம் தீர்வு
பயிர் இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மறியலுக்கு முயற்சி சமரச கூட்டம் மூலம் தீர்வு
பயிர் இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மறியலுக்கு முயற்சி சமரச கூட்டம் மூலம் தீர்வு
ADDED : ஆக 03, 2024 04:50 AM
சிவகங்கை: மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு வங்கி முற்றுகை போராட்டத்தை அதிகாரிகள் சமரசம் செய்ததால் விவசாயிகள் கைவிட்டனர்.
காளையார்கோவில் தாலுகா, மறவமங்கலம் பிர்க்காவிற்கு உட்பட்ட கிராமப்பகுதி விவசாயிகள், 2022- -2023 ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்வதற்காக ஏக்கருக்கு ரூ.400 வீதம் பிரீமிய தொகை செலுத்தினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.24 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வேளாண்மை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்ததில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், 2022-- 2023 ம் ஆண்டிற்கான பயிர் இழப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.
கூட்டுறவு கடன் சங்கத்தை மறிக்க முயற்சி:இதை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட விவசாய சங்க பொருளாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சாத்தப்பன் உள்ளிட்ட விவசாயிகள் மறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் வேளாண்மை துணை இயக்குனர் (இன்சூரன்ஸ்) காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
செவ்வாய் அன்று காளையார்கோவில் தாசில்தார் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி, நல்ல முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.