ADDED : ஆக 19, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மாவட்ட முத்தரையர் கல்வி வளர்ச்சிக்குழு சார்பில் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா காரைக்குடியில் நடந்தது.
2023- -- 2024 ம் கல்விஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
முத்தரையர் கல்வி வளர்ச்சிக்குழு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். காசி வரவேற்றார். முன்னாள் ஆசிரியர் ஆண்டிக்காளை அறிக்கை வாசித்தார். ஆசிரியர் பாலகுருநாதன் தொகுத்து வழங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், நகர் செயலாளர் குணசேகரன் பங்கேற்றனர். கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.

