நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஒ.வெ.செ.,மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வை துறை சார்பில்பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு, சட்ட விழிப்புணர்வு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
கோட்டாட்சியர் விஜயகுமார், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் ரங்கநாதன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) வடிவேல், சுகாதாரத்துறை மனநல ஆலோசகர் தாமரைச்செல்வி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் சிவகாமி, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சமூக பணியாளர் சத்தியமூர்த்தி, மானாமதுரை தாசில்தார கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

