சிவகங்கை : பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் மன்ற துவக்க விழா நடந்தது. பேராசிரியர் ரமாபொற்கலை வரவேற்றார்.
கல்லுாரி செயலர் அசோக் தலைமை வகித்தார். முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார்.
பேராசிரியர் பிரியா செயல்திட்ட விளக்கம் அளித்தார். தீபக், ஜெயா பிரேம்குமார் டிசைனிங் சிந்தனை என்ற தலைப்பில் பேசினர். பேராசிரியர் கோமதி நன்றி கூறினார்.
* மாதவிடாய் கால சுகாதார விழிப்புணர்வு இக்கல்லுாரியில் நடந்தது. மதுரை சுகம் மருத்துவமனை டாக்டர் சுபாஷினி மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினார். டாக்டர் உத்தண்ட ஹரிஹர சுதன் அறிமுக உரை ஆற்றினார். பேராசிரியர் கனிமொழி வரவேற்றார்.
செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கலைவாணி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அனிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஆசைப்பிரியா நன்றி கூறினார்.